வக்ரகாளி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மயிலம் இரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் பேருந்து பாதையில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். மூலஸ்தான சிவலிங்கம் 3 முகங்களை உடையவர். வக்கிராசுரன் என்ற அரக்கனோடு திருமால் போர் புரிந்தபோது, சக்கரத்தை அசுரன் தன் பல்லில் பிடித்துக்கொள்ள திருமால் கூத்தாடி சக்கரத்தைத் திரும்பப் பெற்று அவனைக் கொன்ற தலம். அசுரன் இறந்தபோது அவன் உதிரம் பூமியில் படாதபடி தன் நாக்கை நீட்டி உறிஞ்சிய காளியின் உருவச்சிலை கோயிலில் உள்ளது. |